உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-09-16 07:15 GMT   |   Update On 2023-09-16 07:15 GMT
  • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
  • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்கா மல் காத்திருக்கும் இளை ஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதா ரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப் பட்டு வருகிறது.

இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொரு முறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து பதி வினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனை யோர் 40 வயதுக்கு மிகா மலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகை பெற விரும்புவோர்கள் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்விச் சான்று கள், வேலைவாய்ப்பு அடை யாள அட்டை ஆகிய வற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் சமர்ப்பித்து பயனடைய லாம்.

இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News