உள்ளூர் செய்திகள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு வயலில் விவசாயிகள் விதைகளை தூவிய காட்சி.

பாரம்பரியமிக்க நெல் விதைத்த விவசாயிகள்

Published On 2022-08-04 14:09 IST   |   Update On 2022-08-04 14:09:00 IST
  • ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகங்கை அருகே விவசாயிகள் பாரம்பரியமிக்க நெல் விதைத்தனர்.
  • நேரடி விதை நடவு என்பதால் நாற்றுச்செலவு, கூடுதல் உரச்செலவுகள் இலருக்காது என விவசாயி ஒருவர் கூறினார்.

சிவகங்கை

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகங்கை மேலக்காடு பகுதியில் உள்ள மீனாட்சி இயற்கை வேளாண் பண்ணையில் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி விதை நடவு செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் கண்டுப்பட்டி மேலக்காடு பகுதியில் உள்ள மீனாட்சி இயற்கை வேளாண் பண்ணையில் இறைவழிபாட்டுடன் கருப்பு கவுனி நெல் விதை நடவு செய்யப்பட்டது.

இதுகுறித்து இயற்கை விவசாயி பாலகார்த்திகேயன் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை மற்றும் உணவுத்தேவைகளின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைகளோடு பல்வேறு விதமான பயிர் வகைகளை விவசாயம் செய்து வருகின்றோம்.

ஆடிப்பெருக்கன்று நமது பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி விதை நடவு செய்துள்ளோம். பொதுவாக ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதை நெல் தேவைப்படும். மற்ற நெல் ரகங்களுக்கு மத்தியில் கருப்பு கவுனி நெல்விதை 3 கிலோ போதுமானதாகும்.

அதிக மழைப்பொழிவை யும், குறைந்த நீர்ப்பிடி ப்பினையும் தாங்கி வளரக்கூடிய நெல்ரகம் இதுவாகும். நேரடி விதை நடவு என்பதால் நாற்றுச்செலவு, களை அகற்ற, கூடுதல் உரச்செ லவுகள் இல்லாத எளிய விவசாயத்தில் அதிக விளைச்சலை தருகின்றது. இயற்கை முறையில் விளைவிக்க கூடிய இந்த ரகம் நார்ச்சத்துக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துகளும் கூடுதலாக இருப்பதால் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் சத்தான உணவுப்பொருளாக பயன்படுகிறது.

இந்த நெல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக உயரத்தில் நெற்கதிர்கள் வளரும் தன்மையுடைய ரகமாக இது இருப்பதால் நமது கால்நடைகளுக்கான தீவனச்செலவினையும் கட்டுப்படுத்த உதவுகின்றது.

நமது முன்னோர் பயன்படுத்திய பாரம்பரிய விவசாய முறைகளையும் பயிர்களையும் மறந்து விடாமல் வருகின்ற தலை முறைகளுக்கு எடுத்து செல்ல வேண்டியது எங்கள் விவசாயப்பண்ணையின் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News