உள்ளூர் செய்திகள்

வீரஅழகர் கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2023-07-30 11:49 IST   |   Update On 2023-07-30 11:49:00 IST
  • வீரஅழகர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
  • வருகிற 1-ந்தேதி செவ்வாய் கிழமை மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்று கரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வீரஅழகர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டு தோறும் ஆடிதிருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது.

இதில் முக்கிய நிகழ்வான சுந்தரராஜ பெருமாள்- சவுந்திரவல்லி தாயார் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. இதில் யானை வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள்-சவுந்திரவள்ளி தாயார் புதிய திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மாலை மாற்றி திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.

சுந்தரபுரம் கடை வியாபாரிகள் சார்பில் 7-ம் நாள் மண்டகபடி விழா நடைபெறுகிறது. இதில் இரவு சுந்தரராஜ பெருமாள் புஷ்ப பல்லக்கில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 1-ந்தேதி செவ்வாய் கிழமை மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News