உள்ளூர் செய்திகள்

மின் கம்பியில் தொங்கும் கல் வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளது.

மின் கம்பியில் தொங்கும் கல்

Published On 2022-06-23 09:54 GMT   |   Update On 2022-06-23 09:54 GMT
  • தேவகோட்டையில் மின் கம்பியில் தொங்கும் கல் சாலையில் செல்வோரின் மீது விழும் அபாயம் உள்ளது.
  • மின்சாரத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் மின்சார கம்பிகள் தொய்வு ஏற்பட்டு ஒன்றோடு ஒன்று உரசாமல் இருக்க மின்சார துறையினர் கம்பியில் கல்லை கட்டி தொங்கவிட்டு உள்ளனர். இந்தச் சாலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் நடந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர்.

கோட்டாட்சியர், ஆணையாளர், மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் இந்த சாலையில் உள்ள மின் கம்பியில் கல் தொங்கி கொண்டு இருப்பதால் அது எந்த நேரத்திலும் அந்த வழியாக செல்வோரின் தலையை பதம் பார்க்க வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் முருகன் கூறிகையில், மின்சாரத் துறை அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.

இதே போல் தாழ்வான மின் கம்பிகள் அதிக இடங்களில் செல்கிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மின்சார துறை அதிகாரிகள் அலட்சியத்தால் உயிர் பலிகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளோம் என்றார்.

Tags:    

Similar News