உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மாநில தலைவர் அந்தோணிமுத்து பேசியபோது எடுத்த படம்

வடமஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி தீர்மானம்

Published On 2022-07-18 14:03 IST   |   Update On 2022-07-18 14:03:00 IST
  • ஆண்டு முழுவதும் வடமஞ்சுவிரட்டு நடத்த கோரி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • இந்தபோட்டி நடத்துவது மழை பெய்யும், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் தான்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி ஜனவரி முதல் மே மாதம் வரை 5 மாதங்கள் மட்டுமே வடமஞ்சுவிரட்டு நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில் வடமஞ்சுவிரட்டு நடத்துவது தொடர்பாக சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் தமிழ்நாடு வடமாடு நலச்சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் அந்தோணிமுத்து, துணை தலைவர் பாரத்ராஜா முன்னிலை வகித்தார்.

இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கோவில் மற்றும் தேவாலய விழாக்களில் விதிமுறை பின்பற்றியே ஆண்டு முழுவதும் வடமஞ்சுவிரட்டு நடந்து வந்தது.

வடமாடு மஞ்சு விரட்டு நடத்துவது மழை பெய்யும், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில்தான். மேலும் வடமாடு மஞ்சுவிரட்டில் சங்கத்தில் பதிவு செய்து, விதிமுறைகளை பின்பற்றும் வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் வருடம் முழுவதும் வடமஞ்சுவிரட்டு நடந்த அனுமதிக்க வேண்டும்.

போட்டியில் மருத்துவ பரிசோதனை செய்த காளைகள் மட்டுமே களமிறக்கப்படுகின்றன. மேலும் தேர்வு செய்யப்படும் காளைகள், வீரர்கள் மட்டுமே களமிறக்கப்படுவதால், பார்வையாளர்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இருக்காது.

ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பதால், வடமஞ்சு விரட்டும் ஆண்டு முழுவதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே வடமஞ்சுவிரட்டுக்கு அனுமதி தரப்படும்.மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

இந்த உத்தரவை திரும்ப பெற்று ஆண்டு முழுவதும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News