உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் வரதன் தீபாவளி பரிசு வழங்கினார்.

அடிப்படை வசதி செய்ய நிதி ஒதுக்க கோரிக்கை

Published On 2022-10-31 08:07 GMT   |   Update On 2022-10-31 08:07 GMT
  • காளையார் கோவில் யூனியன் விட்டனேரி ஊராட்சியில் அடிப்படை வசதி செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.
  • மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் கோரிக்கை விடுத்தார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட விட்டனேரி ஊராட்சியில் அடிப்படை வசதி செய்வதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் கோரிக்கை விடுத்தார்.

அவர் கூறுகையில், இந்த ஊராட்சி நிதி பற்றாக்குறையில் இயங்குவதால் மக்கள் பணிகள் உடனே செய்து முடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இன்னும் அடிப்படை தேவைகளே நிறைவேற்றப்படாத எங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு உதவ வேண்டும்.

ஊராட்சிக்கு தேவை யான அடிப்படை வசதி களை செய்வதற்கு கடந்த 1 வருடமாக அரசு நிதி ஒதுக்காததால் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் முடங்கி உள்ளது.ஊராட்சி களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 14-வது நிதிக்குழு மானியம், ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் மற்றும் மாநில நிதிக்குழு மானியத்தை அரசு வழங்குகிறது. இதை கொண்டு பணியாளர் சம்பளம், குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம், தெருவிளக்கு மற்றும் கழிவறை பராமரிப்பு உள்பட பல்வேறு பணிகள் செய்யப்படுகிறது.

மழைக்கு முன்பு கிராமத்தில் வாறுகால் வசதி ஏற்படுத்த, சேதமடைந்த சாலைகளை மேம்படுத்த, குடிநீர், சுகாதார பணிகள் உள்பட அடிப்படை வசதிகளை ஊராட்சியில் ெசய்ய அரசு ஒதுக்கீடு வேண்டி பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.

அடிப்படை வசதி செய்வதற்கு நிதி ஒதுக்காததால் சிரமமாக உள்ளது. எனவே நிதி ஒதுக்க வேண்டும்.விட்டனேரி ஊராட்சியில் சாலை மற்றும் திட்டப்பணிகள் கேட்டு கொடுக்கப்படுகின்ற மனுக்கள் நிதி இல்லை என்று திரும்பி வந்துவிடுகிறது. எந்த கட்சியும் சாராத சமூக ஆர்வலரான செயல்படும் நான் மக்களை எப்படி எதிர் கொள்வது என்ற சூழலும் நிலவுகிறது.

எனவே எங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு உதவ வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News