உள்ளூர் செய்திகள்

வைர மூக்குத்திகளை திருடிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2023-03-03 08:47 GMT   |   Update On 2023-03-03 08:47 GMT
  • வைர மூக்குத்திகளை திருடிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
  • அதனை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எதிரிகளை பழிவாங்க காசு வெட்டி போடும் வழக்கம் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் பத்ரகாளி அம்மன் சிலையில் இருந்த வைர மூக்குத்திகளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி நேற்று காலை தெரியவந்ததும் கோவில் செயல் அலுவலர், திருப்பு வனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் வளாகம் முழுவதும் உள்ள கண்கா ணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஒரு மர்ம நபரின் உருவம் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும் இரவு பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன் மற்றும் 2 காவலாளிகளிடம் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருட்டு போன வைர மூக்குத்திகள் பல லட்சம் மதிப்புடையது. அதனை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News