உள்ளூர் செய்திகள்

பிள்ளையார்பட்டி கோவிலில் இன்று வழிபாடு செய்வதற்காக குவிந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

பிள்ளையார்பட்டி கோவிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு

Published On 2023-01-01 13:56 IST   |   Update On 2023-01-01 13:56:00 IST
  • பிள்ளையார்பட்டி கோவிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.
  • கற்பக விநாயகருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் அதி காலை முதல் நீண்ட வரிசையில் நின்று கற்பக விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் டிரஸ்ட் சார்பில் கோவில் முழுவதும் காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பக்தர்களுக்கு கழிவறை, குடிநீர், உணவு வசதி வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கற்பக விநாயகருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது.

Tags:    

Similar News