உள்ளூர் செய்திகள்

சமத்துவபுர வீடுகளின் உரிமையாளர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கினார்.அருகில் அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தமிழரசி எம்.எல்.ஏ. உள்ளனர்.

சமத்துவபுர வீடுகளின் உரிமையாளர்களுக்கு பட்டா

Published On 2022-12-25 14:09 IST   |   Update On 2022-12-25 14:09:00 IST
  • சமத்துவபுர வீடுகளின் உரிமையாளர்களுக்கு பட்டா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
  • மருத்துவ அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிறுகூடல்பட்டி சமத்துவபுரத்திற்கு அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வருகை புரித்தார். அவரை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதனை தொடர்ந்து பெரியார் நினைவு தினத்தையொட்டி இங்குள்ள சிலைக்கு அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் மாலை அணி வித்து மரியாதை செய்தார். சமத்துவபுர வீடுகளுக்குள் சென்று அவர் ஆய்வு செய்ய வந்தபோது பெண்கள் ஆரத்தி எடுத்து, திலகமிட்டு வரவேற்றனர்.

அவரை குழந்தைகள் கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றனர். குழந்தைகளிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், செல்பி எடுக்கலாமா என்று குழந்தைகள் கேட்க மொபைல் போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்தார்.

ஆட்டோ கிராப்பும் போட்டுக்கொடுத்தார். குழந்தைகள் பூங்கா வேண்டும் என்று கேட்க உடனே பூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.

முன்னதாக அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வரவேற்றார். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கலைஞர் வீடு வழங்கினார். அவரது பேரனாகிய நான் பட்டா வழங்கு கிறேன் என்று கூறியதுடன் 100 சமத்துவபுர வீடுகளின் உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கினார்.

கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி புறக்கணிக்கப்பட்ட 149 சமத்துவபுரங்கள் ரூ.200 கோடி செலவில் சீரமைக்கப்படும் என்று முதல்வர் பட்ஜெட்டில் அறிவித்திருந்த நிலையில், முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் சுமார் ரூ.9 கோடியில் 7 சமத்துவ புரங்களில் உள்ள வீீடுகள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இ்ந்த நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆத்மநாதன், கோட்டாட்சியர் பால் துரை, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, தனி வட்டாட்சியர் கண்ணதாசன், வருவாய் அலுவலர்கள் மன்சூர்அலி, ரமேஷ், கண்ணன், வேல்முருகன், ஒன்றிய சேர்மன் சண்முகவடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் தென்னரசு, சுகாதாரத் துறை துணை இயக்குநர் விஜயசந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News