உள்ளூர் செய்திகள்

ஓவிய பயிற்சி

மாணவ-மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி

Published On 2022-06-08 16:24 IST   |   Update On 2022-06-08 16:24:00 IST
  • கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி காரைக்குடியில் 9-ந் தேதி நடக்கிறது.
  • கலந்து கொள்ளும் பயிற்சியாளருக்கு வரைபட அட்டை வழங்கப்படும்.

சிவகங்கை

மதுரை மண்டல கலைபண்பாட்டுதுறை உதவிஇயக்குனர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கட்டுப் பாட்டில் கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் சவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தை முன்னிட்டு 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக ஓவியப்பயிற்சி பட்டறை நடத்தவும் அதனை தொடர்ந்து சென்னையில் மாநில அளவிலான கலைக்காட்சி நடத்தப்பட உள்ளது.

இந்த ஓவியப்பயிற்சி முகாம்களில் மரபு சார்ந்த ஓவியங்கள், துணி ஓவியங்கள், பேப்பர், பனை மரம், வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள் உள்ளிட்ட ஓவியங்களும் இடம்பெறும் வகையில் நடத்தப்பட உள்ளது. இந்த ஓவியப்பயிற்சி முகாம் வருகிற 9-ந்்தேதி அன்று காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

மாணவ-மாணவிகள் வரைந்த ஓவியங்கள் காட்சிப் படுத்தப்பட்டு அவற்றில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெற உள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்படும். இதில் கலந்து கொள்ளும் பயிற்சியாளருக்கு வரைபட அட்டை வழங்கப் படும். வரைபட பொருட்களை பயிற்சியாளர்கள் எடுத்து வர வேண்டும்.

பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த வாய்ப்பினை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலை ஆர்வ மிக்க மாணவ-மாண விகள்பயன்படுத்தி க்கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் அறிய மதுரை மண்டல கலைபண்பாட்டு மைய உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News