உள்ளூர் செய்திகள்

சிவகங்கை யூனியன் அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் உள்ளனர்.

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

Published On 2022-11-18 08:07 GMT   |   Update On 2022-11-18 08:07 GMT
  • சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தார்.
  • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 48 காலனி நடுநிலைப்பள்ளியில், கட்டப்பட்டுள்ள சமையலறை மற்றும் வைப்பு அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகங்கை

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை கண்காணிப்பதற்கு ஏதுவாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவ லா்களை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத்துறை ஆணையா் லால்வேனா, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துப்பணிகள் தொடா்பாக அவ்வப்போது ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நடவடிக்கை எடுத்து வருகிறார்.

நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா், கலெக்டருடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக ஆய்வு செய்தார். சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், இடையமேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் பிரிவு, தாய் சேய் நலப்பிரிவு, மருந்தகம், மருந்துகளின் இருப்பு மற்றும் பராமாிப்புப் பதிவேடு, தேவையான மருந்துகளின் எண்ணிக்கை மற்றும் ஊசிபோடும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேளாண்மைத்துறையின் சார்பில் ஆலங்குளம் ஊராட்சியில், விவசாயியை சந்தித்து, தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இயற்கை விவசாயம் குறித்து கலந்துரையாடினார். ஒருங்கிணைந்த தேசிய தோட்டக்கலை வளா்ச்சி இயக்கத்தின் கீழ் இயற்கை உரத் தொகுப்பையும் வழங்கினார்.

சிவகங்கை நகராட்சிப் பகுதியில் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நம்ம டாய்லெட் - நகராட்சி பொது கழிப்பறை கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 48 காலனி நடுநிலைப்பள்ளியில், கட்டப்பட்டுள்ள சமையலறை மற்றும் வைப்பு அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களுடன் கற்றல் முறை குறித்தும் கலந்துரையாடினார்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், வாணியங்குடி ஊராட்சியில், பொியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பையூர் பிள்ளைவயல் நியாயவிலைக் கடையில் ஆய்வு செய்து, பொதுமக்க ளுக்கு வழங்க ப்படும் குடிமைப்பொ ருட்களின் தரம் மற்றும் இருப்பு நிலை குறித்தும், செயல்பாடுகள் தொடா்பாகவும் ஆய்வு செய்தார்.சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா ஆய்வு செய்தார். இதேபோன்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News