உள்ளூர் செய்திகள்

வெற்றி சான்றிதழை வழங்கியபோது எடுத்த படம்.

பேரூராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு

Published On 2023-08-24 08:26 GMT   |   Update On 2023-08-24 08:26 GMT
  • திருப்பத்தூர் அருகே பேரூராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
  • இதில் போட்டியிட மன்ற உறுப்பினர்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் மன்ற தலைவராக பதவி வகித்த அ.புசலான் திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் பேரூராட்சிக்கு துணை சேர்மனாக பதிவி வகித்த கே.பி.எஸ். பழனியப்பன் கடந்த மாதம் 30-ந்தேதி பொறுப்பு சேர்மனாக பதவி ஏற்று கொண்டார்.

தொடர்ந்து புதிய சேர்மன் பதவிக்காக போட்டியிடுவதற்கான அறிவிக்கையை செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் வெளியிட்டார். இதில் போட்டியிட மன்ற உறுப்பினர்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து பொறுப்பு சேர்மனாக பதவி வகித்து வந்த பழனியப்பன் ஒரு மனதாக புதிய சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி சான்றிதழை அவரிடம் செயல் அலுவலர் வழங்கினார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கண்ணன், சேக்கப்பன், நிலோபர்நிஷா, கணேசன், சித்ரா தேவி, அமுதா, அழகு, பாப்பா, குமார், தன பாக்கியம், இளநிலை உதவியாளர் சேர லாதன், வரி தண்டர் துரைராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாமி கண்ணு, வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், ஒன்றிய அவைத் தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய கவுன்சிலர் ராம சாமி, கருப்பையா நெற்குப்பை இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர்கள் மாணிக் கம், முருகேசன், ஜெய்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News