உள்ளூர் செய்திகள்

மானாமதுரை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சிமெண்டு சாலை பணிகளை நகர் மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி நேரில் ஆய்வு செய்த காட்சி. அருகில் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் உள்ளனர்.

சிமெண்டு சாலை பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு

Published On 2023-11-08 06:35 GMT   |   Update On 2023-11-08 06:35 GMT
  • சிமெண்டு சாலை பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
  • பணிகளின் நிலை குறித்து நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் அவரிடம் விளக்கி கூறினார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நகராட்சி தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மானா மது ரையில் 27 வார்டுகளிலும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக் சாலை, தார்சாலை, கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், சிமிண்ட்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல பணிகள் நடந்து வருகிறது.

இதில் சிவகங்கை ரோட் டில் இருந்து அண்ணாமலை நகருக்கு எளிதாக செல்லும் வகையில் சுப்பன் கால்வாய் அருகில் நடைபெறும் புதிய சிமெண்ட் சாலை பணி களை நகராட்சி தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிக ளின் நிலை குறித்து நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் அவரிடம் விளக்கி கூறினார்.

இதையடுத்து பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்த காரர்களை தலைவர் மாரி யப்பன் கென்னடி அறிவுறுத் தினார். இந்த ஆய்வின்போது துணைத் தலைவர் பாலசுந்த ரம், ஆணையாளர் ரெங்க நாயகி, வார்டு உறுப்பினர்கள் இந்துமதி திருமுருகன், கங்கா உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

Tags:    

Similar News