உள்ளூர் செய்திகள்

மக்கள் நலத்திட்டங்களில் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும் -எடப்பாடி பழனிசாமி

Published On 2023-03-12 13:54 IST   |   Update On 2023-03-12 13:54:00 IST
  • மக்கள் நலத்திட்டங்களில் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
  • வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார்.

சிவகங்கை

சிவகங்கை சுற்று வட்டார சாலையில் உள்ள அம்மா திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை நடக்கிறது. இதனை மக்களிடம் சென்று சொல்லிவிடுவோம் என்கிற பயத்தில் அ.தி.மு.க. கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்து வருகின்றனர். அ.தி.மு.க. எனும் இயக்கம் தொண்டர்களால் ஆனது. விவசாய குடும்பத்தில் பிறந்த நானும் ஒரு தொண்டன்தான். தொண்டர்களாக இருந்து இந்த இயக்கத்தை வழி நடத்தி வருகிறோம்.

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது தொண்டர்கள் உள்ளத்தில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் சிதைந்து விடுவார்கள்.

தி.மு.க.வின் 22 மாத ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. ஆட்சி மாறினால் காட்சியும் மாறும் எனபதை ஸ்டாலின் உணர வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் ரூ.2கோடி செலவில் நினைவு சின்னமாக எழுதாத பேனாவை வைக்கலாம். மீதமுள்ள ரூ.79 கோடிக்கு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எழுதும் பேனாவை இலவசமாக வழங்கலாம்.

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவில்லை. இதேபோல அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மினி கிளினிக், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்பட பல திட்டங்களை முடக்கி உள்ளது. இதுதான் தி.மு.க..வின் சாதனை.

தற்போது அ.தி.மு.க.வை சிதைக்கும் முயற்சியில் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எதையும் எதிர்கொள்ளும் திறன் எங்களுக்கு உள்ளது. எங்களை பற்றி சிந்திப்பதை விடுத்து, மக்கள் நலனில் ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும். நலத்திட்ட உதவிகளை தடுத்து ஏழைகளை வஞ்சிக்கும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சிவங்கை அரண்மனை வாசலில் உள்ள ராணி வேலு நாச்சியார் சிலை, பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர். சிலை ஆகியவற்றுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, பாஸ்கரன், கோகுல இந்திரா, எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, வி.பி.பரமசிவம், திண்டுக்கல் மாநகராட்சி முதல் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சரவணன், நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், செல்வமணி, சிவாஜி, ஸ்டீபன்அருள்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மகளிரணி வெண்ணிலா சசிக்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கே.பி.ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் சகாய செல்வராஜ், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மோசஸ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாதவன், சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அன்பு, அமைப்பு சாரா அணி துணை செயலாளர்அழகர்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை ஊரவயல் எஸ்.பி.ராம், காரைக்குடி நகர வட்ட செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் ெஜ.ஷோபியா பிளாரன்ஸ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், நகர நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இந்த கூட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி முன்னதாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து சிவகங்கை அரண்மனையில் உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலு த்தினார்.

Tags:    

Similar News