உள்ளூர் செய்திகள்

மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியையொட்டி சிவாச்சாரியார் அம்பு எய்தார்.

மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் மகிஷா சூரசம்ஹாரம்

Published On 2022-10-06 08:12 GMT   |   Update On 2022-10-06 08:12 GMT
  • மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
  • 4 ரத வீதியில் வலம் வந்து ஈசானிய மூலையில் அமைந்துள்ள மகர்நோன்பு பொட்டலில் எழுந்தருளினார்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.முறையூர் மீனாட்சி- சொக்கநாதர் கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. கடந்த 9 நாட்களாக அம்மன் பல்வேறு அலங்காரங்களில் கொலு மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

நிறைவு நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு அன்னை மீனாட்சி குதிரை வாகனத்தில் எழுந்தருளி 4 ரத வீதியில் வலம் வந்து ஈசானிய மூலையில் அமைந்துள்ள மகர்நோன்பு பொட்டலில் எழுந்தருளினார்.

அங்கு அமைக்கப்ப ட்டிருந்த மகிஷாசூரன் குடிலை நோக்கி 4 திசையிலும் சிவாச்சாரியார் அம்புகளை எய்தார். இதனை காண மகர்நோன்பு பொட்டலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம், கிராமத்தார்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News