உள்ளூர் செய்திகள்

மதகுபட்டி நாடக மேடையை திறந்து வைத்த எம்.எல்.ஏ.

Published On 2023-07-05 14:03 IST   |   Update On 2023-07-05 14:03:00 IST
  • மதகுபட்டி நாடக மேடை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
  • இளைஞர் இளம்பெண் பாசறை துணை செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டி ஊராட சிக்குட்பட்ட உச்சபுளிப் பட்டி கிராமத்தில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் நாடக மேடை அமைக்கப் பட்டுள் ளது. இதனை எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. செயலாளருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்த னர்.

இதில் சிவகங்கை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாகரன், மாவட்ட கவுன்சிலர் தேவராஜ், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் செந்தில் முருகன், மதகுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் சங்கர் ராமநாதன், மாவட்ட விவசாய பிரிவு துணைச்செயலாளர் சீனிவாசன் இளைஞர் இளம்பெண் பாசறை துணை செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News