உள்ளூர் செய்திகள்

இலவச கணினி மையம் திறப்பு விழா

Published On 2023-05-08 14:18 IST   |   Update On 2023-05-08 14:18:00 IST
  • சிவகங்கை அருகே இலவச கணினி மையம் திறப்பு விழா நடந்தது.
  • கிளாசிக் பவுண்டேசன் சார்பில் சிவராமன்செட்டியார்-தெய்வானைஆச்சி நினைவாக தொடங்கப்பட்டது.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே உள்ள பி.அழகாபுரி கிராமத்தில் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச கணினி மையம் திறப்பு விழா நடந்தது. கிளாசிக் பவுண்டேசன் சார்பில் சிவராமன்செட்டியார்-தெய்வானைஆச்சி நினைவாக தொடங்கப்பட்ட இந்த கணினி மையம் திறப்பு விழாவிற்கு கிளாசிக் ஆதப்பன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.எல்.மணிவாசகம், மீனாட்சிசுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளித்தலைவர் வெள்ளையன்செட்டியார், ஆர்.எம்.மெட்ரிக்பள்ளி தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கணினி மையத்தை சிவ.ராமநாதன் திறந்து வைத்தார். ஞானம் ஆதப்பன், மீனாள் ராமநாதன், ஐஸ்வர்யா, இந்துமதிபாலா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

பேராசிரியர்கள் சொக்கலிங்கம் நா.சுப்பிரமணியன், தேனப்பன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் அழகுமணிகண்டன், சுரேஷ், காசிநகர சத்திர துணைத் தலைவர் மாணிக்கம்செட்டியார், ஏ.எல்.வெங்கடாசலம், முருகப்பன் ஆகியோர் பேசினர்.

இந்த மையத்தில் கணினி பயில்வதுடன் சான்றிதழ் படிப்புகளான டி.ஓ.ஏ., சி.ஓ.ஏ, டி.சி.ஏ., டி.ஓ.எம்.டேலி, இ.ஆர்.பி, ஜி.எஸ்.டி, போன்றவற்றிற்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது. முன்னதாக ஏ.எல்.ஞானவேல் வரவேற்றார். முடிவில் கருப்பையா ராமநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News