விழாவில் சிறப்பாக பயின்ற மாணவிக்கு அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன் ஆகியோர் பரிசு வழங்கினர். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி உள்பட பலர் உள்ளனர்.
அரசு கல்லூரி பொன்விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
- பூலாங்குறிச்சியில் அரசு கல்லூரி பொன்விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
- ரூ.1.20 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட் கிராம நிர்வாக அலுவலகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் சிவலிங்கம் செட்டியார் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் பொன்விழா ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரியில் சிவலிங்கம் சிலையை திறந்து வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கல்லூரியின் பொன்விழா மலரை வெளியிட்டு சிறப்பாக பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
சென்னை வாழ் பூலாங்குறிச்சி நகரத்தார் சங்கத்தின் சார்பில் பூலாங்குறிச்சி ஊராட்சி சார்பி்ல் ரூ.5.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இலவச கணினி மையம், ரூ.1.20 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட் கிராம நிர்வாக அலுவலகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பொன் முத்துராமலிங்கம் (கல்லூரி கல்வி இணை இயக்குனர், மதுரை மண்டலம்), அபிராமி ராமநாதன் (படம் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர்), நல்லம்மை அபிராமி ராமநாதன், ஆவின் பால்வளத் தலைவர் சேங்கைமாறன், திருப்பத்தூர் வட்டாட்சியா; திரு.வெங்கடேசன், கல்லூரி முதல்வர் முத்துச்சாமி, ஊராட்சி மன்றத்தலைவர் சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.