உள்ளூர் செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் கலந்துரையாடல்

Published On 2022-08-26 08:50 GMT   |   Update On 2022-08-26 08:50 GMT
  • தேவகோட்டையில் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் கலந்துரையாடல் நடந்தது.
  • மாவட்ட துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், நகர் காவல் ஆய்வாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 75-வது சுதந்திர தினநாளை முன்னிட்டு 1942 ஆகஸ்டு புரட்சியில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுடன் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

நகர மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். தியாகி பாலபாரதி செல்லத்துரை பேரன் இருமதி துரைகருணாநிதி, தியாகி சின்ன அண்ணாமலை பேரன் மீனாட்சிசுந்தரம், தியாகி ராமநாதன் மகன் சத்யா, தியாகி இறகுசேரி முத்துச்சாமி மனைவி பஞ்சரத்தினம், 17 வயதில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட தியாகி ராமு வாரிசு கல்யாண சுந்தரி முன்னிலை வைத்தனர்.

மாவட்ட துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், நகர் காவல் ஆய்வாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். விழா அரங்கில் இந்த பகுதியில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர் அமைக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளில் மற்றும் வாரிசுகள் இப்பகுதியில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளை புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தனர்.

Tags:    

Similar News