உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளியான தடகள வீரருக்கு நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளி தடகள வீரருக்கு நிதி உதவி

Published On 2022-06-29 08:51 GMT   |   Update On 2022-06-29 08:51 GMT
  • மாற்றுத்திறனாளி தடகள வீரருக்கு நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.
  • தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூரில் நடைபெறுகிறது.

சிவகங்கை

தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் சார்பில் 100 மீட்டர், 200 மீட்டர் போட்டிக்கு மாற்றுத்திறனாளி வீரரான சிவகங்கை மாவட்டம், சிவல்பட்டி கிராமத்தை வினோத்குமார் தகுதி பெற்றுள்ளார்.

அவருக்கு பாராலிம்பிக் கமிட்டியால் நுழைவு கட்டணம், போக்குவரத்து, உணவு, தங்குமிடம், மருத்துவ உதவிகளுக்காக ரூ. 25 ஆயிரம் நிதி உதவியை பாராலிம்பிக் கமிட்டியின் சிவகங்கை மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் வழங்கினார்.

அப்போது சிவகங்கை மாவட்ட பாரா ஒலிம்பிக் விளையாட்டு செயலாளர் பாபு, துணைத் தலைவர் சரவணன், பொருளாளர் ராஜபாண்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News