உள்ளூர் செய்திகள்

உயர்தர உள்ளூர் பயிர் ரகங்கள் கண்காட்சியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி உள்ளனர்.

உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி

Published On 2023-01-08 14:29 IST   |   Update On 2023-01-08 14:29:00 IST
  • உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி நடந்தது.
  • வேளாண்மைத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில், உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.

கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று 100 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 628 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

சிறந்த பண்புகளைக் கொண்ட பல்வேறு பாரம்பரியமிக்க உள்ளுர் பயிர் ரகங்களை கண்டறிந்து, பகுதிக்கேற்ற சிறந்த மேம்பாட்டு ரகங்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாவட்டந்தோறும் இது குறித்த கண்காட்சிகள் வருடத்திற்கு 3 முறை நடத்த அறிவுரை பெறப்பட்டுள்ளது.

அதன்படி 2-வது கண்காட்சி இன்றையதினம் தொடங்கப்பட்டு, மாநில விரிவாக்க திட்ட ங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் மரபியல் பண்முகத்தன்மை கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பாரம்ப ரியமிக்க உள்ளுர் ரகங்களை காட்சிப்படுத்துதல், வேளாண் பல்கலைக்கழக பயிர்களை காட்சிப்படுத்து தல், விவசாய விஞ்ஞா னிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு திருவிழா, மரபியல் பன்முகத்தன்மை குறித்த பல்கலைக்கழக விஞ்ஞா னிகளின் தொழில்நுட்ப உரை போன்ற பல நிகழ்வுகள் நடைபெறு கிறது.

விவசாயிகள் தங்கள் பகுதியில் விளையும் சிறந்த பண்புகளைக் கொண்ட பாரம்பரியமிக்க உள்ளுர் உரிய ரகங்களை காட்சிப்பொருளாக வழங்கி, கண்காட்சியில் பங்கு கொண்டு விவசாயம் காத்து உணவு உற்பத்தியைப் பெருக்கி தங்கள் வாழவாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி, வேளாண் இணை இயக்குநர் தனபாலன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கை மாறன். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரசுவதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மதிவாணன், ஆரோக்கிய சாந்தாமேரி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Similar News