உள்ளூர் செய்திகள்

நாட்டரசன்கோட்டையில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னள் அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்றார்.

பொங்கல் பரிசு வழங்கவே தி.மு.க. அரசு யோசிக்கிறது

Published On 2022-12-10 06:56 GMT   |   Update On 2022-12-10 07:25 GMT
  • பொங்கல் பரிசு வழங்கவே தி.மு.க. அரசு யோசிக்கிறது என முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
  • வீடுகளுக்கே நேரடியாக வந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

சிவகங்கை

சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன் கோட்டையில் சொத்துவரி, பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க நகரசெயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்று பேசுகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு கொரோனா காலத்தில் கூட பொது மக்களுக்கு பொங்கல் பரிசு, உதவி தொகைகளை வழங்கியது. வீடுகளுக்கே நேரடியாக வந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

தற்போதைய தி.மு.க. அரசு பொங்கல் பரிசு வழங்கவே யோசித்து வருகிறது. இன்னும் முடிவு செய்யவில்லை. பொதுமக்கள் இந்த அரசை வீட்டிற்கு அனுப்ப தயாராகுங்கள் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, சிவாஜி, கருணா கரன், அருள்ஸ்டிபன் உள்ளிட்ட பலர் பேசினர்.

நிர்வாகிகள் மாரியப்பன், செல்வம், கவுன்சிலர் சின்ன மருது, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர்ராமநாதன், அவைத்தலைவர் பாண்டி, கேபி.முருகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சசிகுமார், பாபு, மாவட்ட பாசறை துணைச்செயலாளர் சதிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News