உள்ளூர் செய்திகள்

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நகராட்சி அலுவலகம், காவல் நிலையத்தை படத்தில் காணலாம்.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேவகோட்டை தியாகிகள் பூங்கா-நகராட்சி அலுவலகம்

Published On 2023-08-15 08:06 GMT   |   Update On 2023-08-15 08:06 GMT
  • சுதந்திர தினத்தை முன்னிட்டு தேவகோட்டை தியாகிகள் பூங்கா மற்றும் நகராட்சி அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
  • போலீஸ் நிலையமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே, நகராட்சி அலுவலகம் எதிரே 1936-ம் ஆண்டு அப்போதைய மாநில கவர்னரால் பூங்கா திறக்கப்பட்டது. 1942 ஆகஸ்ட் மாதத்தில் நீதிமன்றம் முன்பாக ஆகஸ்ட் புரட்சி நடைபெற்றது. அப்போது ஆங்கிலேயர்கள் 75 பேரை சுட்டுக் கொன்றனர். மேலும் 112 நபர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் 1947-ம் ஆண்டு பூங்காவில் தியாகிகள் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.

ஜாலியன் வாலாபாக் அடுத்து சுதந்திர போராட்டத்திற்காக அதிக நபர்கள் உயிர் நீத்த இடம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது தியாகிகள் பூங்கா, நகராட்சி அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் நகர் போலீஸ் நிலையமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News