- நிலக்கடலை பயிர் சாகுபடியில் ஒரு செடிக்கு 150 முதல் 160 கடலை விற்பனை செய்யப்படுகிறது.
- எஸ்.புதூர் ஒன்றிய மேலாண்மை உழவர் நலத்துறை உதவி இயக்குனர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள வலசுப்பட்டி பிள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சின்னம்மாள் ராமன். இவர் தனது மானாவாரி நிலத்தில் நிலக்கடலை பயிர் செய்தார்.
எஸ்.புதூர் ஒன்றிய வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை உதவி அலுவலர் பால முருகனின் நவீன கடலை சாகுபடி அறிவுரைக்கு ஏற்ப, கடலை விதைகள் வரிசை முறையில் ஒரு அடி இடைவெளியில் விதைகள் பதிக்கப்பட்டு, விதை நேர்த்தி, உர நிர்வாகம், இலைவழி தெளிப்பு மற்றும் ஜிப்சம் இட்டு மண் அணைத்தல் உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் கடை பிடித்தார்.
அவருடைய மானாவாரி நிலத்தில் பயிரிட்ட கடலை அறுவடை செய்யப்பட்டதில் ஒரு கடலை செடியில் சுமார் 150 முதல் 160 நிலக்கடலைகள் வரை சாகுபடி இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சரியான நேரத்தில் நவீன விவசாய தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப்பட்டு சரியான அளவில் மண்ணை அணைத்து சாகுபடி செய்ததால் நிலக்கடலை விளைச்சல் அமோகமாக இருந்துள்ளது.
இது விவசாயிகளிடையே மிகுந்த ஆச்சரியத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது. ஏக்கருக்கு சுமார் 1500-ல் இருந்து 1600 கிலோ வரை மகசூல் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விவசாயி ராமன் எஸ்.புதூர் ஒன்றிய மேலாண்மை உழவர் நலத்துறை உதவி இயக்குனர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.