உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

Published On 2022-12-24 08:10 GMT   |   Update On 2022-12-24 08:10 GMT
  • இடைக்காட்டூர் திருஇருதய திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
  • ஏற்பாடுகளை திருத்தல அருட் பணியாளர் இமானு வேல் தாசன் செய்து வருகிறார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் 140 ஆண்டுகள் புகழ் மிக்க திருஇருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது. இங்கு ஆங்கில மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு நாளாக கருதப்படுகிறது.

அன்றைய தினம் காலை முதல் மாலை வரை நடைபெறும் சிறப்பு திருப்பலிபூஜை, இதய நோயாளிகள் குணம்பெற வேண்டி நடைபெறும் கூட்டு திருப்பலி பிரார்த்த னையில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் கேரள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

புகழ்மிக்க இந்த ஆலயத்தில் இன்று இரவு கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி குழந்தை ஏசு பிறக்கும் நிகழ்ச்சி பிரமாண்ட குடில் அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து நள்ளி ரவு திருப்பலியும், நாளை (ஞாயிறு) காலை 11மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்ப லியும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடு களை திருத்தல அருட் பணியாளர் இமானு வேல் தாசன் செய்து வரு கிறார். இதே போல் மானா மதுரை நகர்பகுதியில் உள்ள புகழ்மிக்க புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் இன்று இரவு ஏசுபாலகன் பிறக்கும் நிகழ்ச்சியும், நள்ளிரவு திருப்பலியும் நடக்கிறது.

Tags:    

Similar News