உள்ளூர் செய்திகள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று

Published On 2022-06-19 08:10 GMT   |   Update On 2022-06-19 08:10 GMT
  • 215 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்றுகள் பெற்ற பின்புதான் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டுமென கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
  • பள்ளி வாகனங்களை அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான வேகத்தில் இயக்கக்கூடாது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதா னத்தில் போக்குவரத்துத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை
அலுவலர்களுடன் பள்ளி வாகனங்களில் கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சரியான முறையில் உள்ளதா? என்பது குறித்து போக்குவரத்துத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் வாகனத்தின் நிறம், பள்ளி பற்றிய விபரம், தொடர்பு எண்கள், பிரதிபலிப்பான் பட்டைகள், பிரேக் திறன், உருளைப்பட்டைகளின் நிலை, அவசரக்கதவின் நிலை, வாகனத்தின் கதவுகள் இயக்க நிலை, வாகனத்தின் இருக்கை நிலை, வாகனத்தின் படிக்கட்டுகள், வாகன ஓட்டுநரின் இருக்கை, வாகனத்தின் உட்புறம், தரைப்பலகை, ஜன்னல்கள், சிவப்பு மற்றும் ெவள்ளை பிரதிபலிப்பான், நாடாக்கள், முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகள், தீயணைக்கும் கருவி மற்றும் வேகக்கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் நிலை குறித்து கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் குறைபாடுகள் கண்டறியப்படும் வாகனங்க ளில் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு சமர்ப்பித்து, சான்றுகள் பெற்ற பின்புதான் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். வாகன ஓட்டுநர்கள் வாகனத்தினை இயக்குவதற்கு முன்பு வாகனத்தினை பரிசோதனை செய்த பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும்.

வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது முழு கவனத்துடன் வாகனத்தை இயக்குவதோடு, அனு மதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான வேகத்தில் இயக்கக் கூடாது. வாகனம் இயக்கும் போது மது அருந்துதல், கைபேசியை உபயோகித்தல் உள்ளிட்ட செயல்முறைகள் இருத்தல் கூடாது. எதிரில் வாகனம் வரவில்லை என உறுதி செய்த பின்னரே, பிற வாகனத்தினை கடந்து செல்ல முயற்சிக்க வேண்டும். சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் உள்ள சிவகங்கை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம், சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய 7 வட்டாரங்களுக்குட்பட்ட 64 பள்ளிகளை ேசர்ந்த 175 பள்ளி வாகனங்கள் மற்றும் காரைக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் உள்ள காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய 2 வட்டாரங்களுக்குட்பட்ட 45 பள்ளிகளை சோ;ந்த 140 பள்ளி வாகனங்கள் என மொத்தம் 109 பள்ளிகளை சேர்ந்த 315 பள்ளி வாகனங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளன.

அதில் சிவகங்கை வட்டாரங்களை சேர்ந்த 110 வாகனங்களும், காரைக்குடி வட்டாரங்களைச் சேர்ந்த 105 வாகனங்களும் என மொத்தம் 215 வாக னங்களில் ஆய்வு மேற்கொள்ள ப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் பராமரிப்பு பணியில் உள்ளதால் அந்த பணிகள் முடிவுற்ற பின், ஆய்விற்கு முறையாக உட்படுத்தப்பட்டு, பின்னர் சான்றுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News