உள்ளூர் செய்திகள்

மாட்டுவண்டி பந்தயம்

Published On 2023-07-23 08:51 GMT   |   Update On 2023-07-23 08:51 GMT
  • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
  • ஆடிப்பூர பிரம்மோற்சவ தேர் திருவிழா

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டியில் வடிவுடையம்மை சமேத வளரொளிநாதர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இந்த மாட்டுவண்டி பந்தயம் காரைக்குடி-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், நடுமாடு பிரிவில் 28 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 52 ஜோடிகள் என மொத்தம் 91 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 52 வண்டிகள் கலந்து கொண்ட தால் 27 மற்றும் 25 என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

அதேபோன்று மாடு ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு 4 காளைகள் இணைந்து 2 வண்டிகள் ஒன்றாய் சென்றதால் சாலையில் நின்று மாட்டு வண்டியை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்கள் சிதறி அடித்து ஓடினர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News