உள்ளூர் செய்திகள்

கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி உள்ளனர்.

சிவகங்கையில் கலைத்திருவிழா

Published On 2022-12-08 13:58 IST   |   Update On 2022-12-08 13:58:00 IST
  • சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நடந்தது.
  • இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவி லான கலைத்திருவிழா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி) முன்னிலை வகித்தனர்.

இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

முதலமைச்சரால் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்டு வரும் திட்டங்களின் அடிப்படையில், கல்வி பயில்வதில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாணவர்களின் திறனை வெளிக்கொணருவ தற்கென தற்போது பள்ளிக்கல்வி துறையில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்வி திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதும் அந்தந்த வட்டார அளவில் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த கல்வித்திரு விழாவில் ஒவ்வொரு வகுப்புகளின் பிரிவின் அடிப்படையில் தனிப்போட்டிகளும், குழுப்போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

இதில் முதலிடம் பெறவுள்ள மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கிறார்கள்.

அதில் வெற்றி பெறும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் கல்வி சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புக்களையும் பெற உள்ளனர். இதுதவிர, மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு எனது சார்பிலும், ஊக்கத்தொகையாக முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

மாணவர்கள் அனைத்து துறைகளிலும் தலைசிறந்து விளங்கி, எதிர்கால இந்தியாவிற்கு வலு சேர்க்கும் வகையில் தங்களது பங்களிப்பை அளித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கை மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News