உள்ளூர் செய்திகள்

வேளாண் விரிவாக்க மையத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தமிழரசி எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.




வேளாண் விரிவாக்க மையம்: அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டல்

Published On 2022-08-15 09:04 GMT   |   Update On 2022-08-15 09:04 GMT
  • இளையான்குடியில் ரூ.2.41 கோடியில் வேளாண் விரிவாக்க மையம் அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
  • இந்த ைமயத்தின் வாயிலாக வேளாண் பெருங்குடி மக்கள் விதைகள், உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியவற்றை சேமிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களுக்கு பயனுள்ள வகையிலும் மையத்தில் தனியாக இடங்கள் அமைக்கப்பட உள்ளன.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி பகுதியில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், இந்த ைமயத்தின் வாயிலாக வேளாண் பெருங்குடி மக்கள் விதைகள், உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியவற்றை சேமிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களுக்கு பயனுள்ள வகையிலும் மையத்தில் தனியாக இடங்கள் அமைக்கப்பட உள்ளன.

குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிக்கின்ற மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம் பெறுவதை தடுக்கும் வகையில் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முழுமையாக அறிந்து கொண்டு, அதன் மூலம் பயன் பெற்று வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், கார்த்தி சிதம்பரம் எம்.பி. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், வேளாண் இணை இயக்குநர் தனபாலன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர் இந்திரா, ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டு ஒன்றியத்தின் தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆரோக்கியமேரி சாந்தாராணி, இளையான்குடி பேரூராட்சி தலைவர் செய்யது ஜமிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News