உள்ளூர் செய்திகள்

பழங்குடியினர் ஜாதி சான்றிதழ்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அருகில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி உள்ளனர்.

நரிக்குறவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட நடவடிக்கை

Published On 2023-07-18 07:11 GMT   |   Update On 2023-07-18 07:11 GMT
  • நரிக்குறவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
  • அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். கார்த்திக் சிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு நரிக்குற வர்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் நரிக்குறவர் இன மக்களின் வாழ்வா தாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு, பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நரிக்குறவர்கள் என்று அழைக்கப்பட்டதை நெரிக்குறவர்கள் என்று அழைத்து அவர்களுக்கு அங்கீகாரம் தந்தார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் இன மக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கவும், வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அவர்களுக்காக உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதன்மூலமும் அவர்களை பாதுகாப்ப தற்கான நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

நரிக்குறவர் இன மக்களின் 50 ஆண்டுகாள கோரிக்கையை ஏற்று பழங்குடியினர் சான்று வழங்கப்படுகிறது.

அதனடிப்படையில், சிவகங்கை வட்டத்திற்குட் பட்ட வாணியங்குடி ஊராட்சி பகுதியிலுள்ள பையூர் பிள்ளைவயல் நரிக்குறவர் காலணியில் வசித்து வரும் 176 குடும்பங்களை சார்ந்த 104 நபர்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாமேரி, நகர்மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் புவனேஸ்வரி (வாணி யங்குடி), மணிமுத்து (காஞ்சிரங்கால்), சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News