உள்ளூர் செய்திகள்

மக்கள் நீதிமன்றங்களில் 66 வழக்குகள் முடித்து வைப்பு

Published On 2023-06-11 08:53 GMT   |   Update On 2023-06-11 08:53 GMT
  • சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றங்களில் 66 வழக்குகள் முடித்து வைத்து 6 பயனாளிகளுக்கு ரூ.1,42,78,84 வரை கிடைத்தது.
  • வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

சிவகங்கை

தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை மாவட்டத்தில் 2 மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டது. அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள நுகர்வோர் வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில்முரளி ஆகியோர் வழக்குகளை விசாரித்தார்.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 2 குற்ற வியல் வழக்குகள், 65 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், அதே போல் 19 குடும்ப பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் 16 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள், 20 வங்கிக்கடன் வழக்குகள் என மொத்தம் 122 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 19 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.86,28,346 வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.

அதேபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத (Prelitigation) வழக்குகளில் 305 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 47 வழக்கு தீர்வு காணப்பட்டு ரூ.56,50,500 வரையில் வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணி யாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News