உள்ளூர் செய்திகள்

தடகள போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

மாவட்ட அளவிலான தடகள போட்டியில் சீர்காழி பள்ளி சாதனை

Published On 2023-04-02 13:19 IST   |   Update On 2023-04-02 13:19:00 IST
  • 5 தங்கம் உட்பட 20 பதக்கங்களை வென்று சிறப்பித்தனர்.
  • வெற்றிபெற்ற 24 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டது.

சீர்காழி:

மயிலாடுதுறை குட்சமாரிடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறுவர்களுக்கான தடகள போட்டியில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியைச் சார்ந்த 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் 5 தங்கம் உட்பட 20 பதக்கங்களை வென்று சிறப்பித்தனர்.

மேலும் இவ்விளையாட்டு போட்டியில் மாவட்டத்தில் பணியாற்ற கூடிய அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கான 100 மீட்டர் அஞ்சல் நடைபெற்றது.

இதில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவும், 40 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் என இரண்டு பிரிவாக நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் பணியாற்ற கூடிய 30- க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் வெற்றி பெற்ற 24 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து, ரொக்க பரிசினை பள்ளியின் தாளாளர் அலெக்சாண்டர் ஹெப்ளின் ஜசாயா வழங்கி பாராட்டினார்கள்.

வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி செயலர் ராமகிருஷ்ணன், பள்ளி குழு தலைவர் சொக்கலிங்கம், பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி, பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் எஸ். முரளிதரன், துளசிரங்கன், வரதராஜன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News