உள்ளூர் செய்திகள்

சிரா பதிப்பகம்- சிரா இலக்கியக் கழக மகளிர் தின விழாவில் "பெண்ணே பேசு" நூல் வெளியீடு

Published On 2024-03-04 08:35 GMT   |   Update On 2024-03-04 08:35 GMT
  • நூலை எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியின் விரிவுரையாளர் உ.லாவண்யா பெற்றுக் கொண்டார்.
  • நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சிரா பதிப்பகம் மற்றும் சிரா இலக்கியக் கழகம் இணைந்து நடத்திய மகளிர் தின விழா திருச்சி ப்ரீஸ் ரெசிடென்சியில் நடந்தது.

விழாவில் பெண்ணே பேசு என்ற புத்தகத்தை சிரா பதிப்பகத்தின் நிறுவனர் தங்கபிரகாசி ராமச்சந்திரன், சிரா இலக்கியக் கழக தலைவர் கவிஞர் பா. ஸ்ரீராம், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000-த்தின் 2024-25-ம் ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபீஸரும், சிரா இலக்கியக் கழக புரவலவருமான மேஜர் டோனர் டாக்டர் கே. ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர்.வி. பள்ளியின் முதல்வர் பொற்செல்வி, சிரா இலக்கியக் கழக துணைத் தலைவர் எழுத்தாளர் கேத்ரின் ஆரோக்கிய சாமி, திருச்சிராப் பள்ளி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மூத்த எழுத்தாளர் மழபாடி ராஜாராம் , மருத்துவர் மணி மேகலை ஏகநாதன் ஆகியோர் வெளியிட்டு பேசினர்.

நூலை எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியின் விரிவுரையாளர் உ.லாவண்யா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவரையும் விழா குழுவினர் கவுரவித்தனர்.

Similar News