விநாயகர் கோவிலில் வெள்ளி விழா பிரம்மோற்சவம்
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு நடத்தினர்.
- சாமிக்கு மகா மங்கள தீபாராதனை செய்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசனட்டி பாரதி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவில் அமைத்து, 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக வெள்ளி விழா பிரம் மோற்சவம் மற்றும் ஏக தின லக்ஷார்ச்சனை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு நடத்தினர். விழாவானது, கணபதி ஹோமம், குரு பிரார்த்தனை, நாந்தி பூஜை, அக்னி ஜனனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. பின்னர் கலச ஆராதனைகள், மகா கணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம், துர்கா ஹோமம் நவகிரக ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பின்னர், மகா தீபாராதனை செய் யப்பட்டது.
3-ஆம் நாள் நிகழ்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, மூலவருக்கு சிறப்பு அபிஷே கம் மற்றும்,சதா ருத்ராபிஷேகமும் நடந்தன. இதைத்தொடர்ந்து ஏக தின லட்சார்ச்சனை நடை பெற்றது. வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, பல்லாயிரக்கணக்கான மலர்களைக் கொண்டு விநாயகப் பெருமானுக்கு மலர்களால் லட்ச அர்ச்ச னைகள் செய்யப்பட்டது. இதன் பின்னர் சாமிக்கு மகா மங்கள தீபாராதனை செய்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், சிறப்பு மலர் அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்க பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை,கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி ருந்தனர்.