அங்காடிக்கு விற்பனைக்காக வந்திருந்த பட்டுக்கூடுகளை படத்தில் காணலாம்.
தருமபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் ரூ.12.36 லட்சத்திற்கு விற்பனை
- தருமபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் ரூ.12.36 லட்சத்துக்கு விற்பனை ஆனாது.
- கிலோ ரூ.240 க்கும், அதிகபட்சமாக ரூ.463-க்கும், சராசரியாக 384 ரூபாய் என ஏலம் போனது
தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநா தபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.
தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் கடந்த இரண்டு வாரம் பட்டுக்கூடு வரத்து கடுமையாக குறைந்து ரூ.3 மற்றும் 5 லட்சத்திற்கு விற்பனையானது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில், 40 விவசாயிகள் கொண்டு வந்த 3214 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.12.36 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் குறைந்தபட்சம் கிலோ ரூ.240 க்கும், அதிகபட்சமாக ரூ.463-க்கும், சராசரியாக 384 ரூபாய் என ஏலம் போனது. மேலும் கடந்த இரண்டு வாரத்தில் பட்டுக்கூடு வரத்தும், விலையும் குறைந்து 3 மற்றும் 5 லட்சத்திற்கு விற்பனையானது.
ஆனால் நேற்று பட்டுக்கூடு வரத்து அதிகரித்து 3214 கிலோ வெண் பட்டுக்கூடுகள் 12.36 இலட்சத்திற்கு விற்பனையானது. இதனால் பட்டுக்மேகூடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.