உள்ளூர் செய்திகள்

தேவர்சோலையில் நாளை கடையடைப்பு போராட்டம்

Published On 2022-08-16 15:42 IST   |   Update On 2022-08-16 15:42:00 IST
  • மாநில அரசுகள் ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
  • தேவர்சோலை பேரூராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்

ஊட்டி:

நாடு முழுவதும் உள்ள தேசிய வன உயிரின காப்பகத்தில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் சூழல் மண்டலமாக அறிவித்து நிரந்தர கட்டிடங்கள் கட்ட தடை விதிக்க வேண்டும்.

இதுதொடர்பாக மாநில அரசுகள் ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனால் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகள் மற்றும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில் சூழல் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சியில் நாளை (புதன்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்து உள்ளது. மேலும் பொது மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என அறிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News