உள்ளூர் செய்திகள்

சுகாதார அலுவலர் இளங்கோ முன்னிலையில் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தேங்கி கிடந்த சாக்கடை கழிவுகள் வெளியேற்றப்பட்ட காட்சி.

நெல்லை மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தேங்கிய சாக்கடை அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2023-02-18 09:11 GMT   |   Update On 2023-02-18 09:11 GMT
  • நெல்லை எஸ்.என். ஹைரோட்டில் இருபுறமும் தூர்ந்துபோன வாறுகால்கள் புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
  • மாவட்ட கல்வி அலுவலகம் நுழைவு வாயில் முன்பு பாதி பணிகள் முடிவடைந்த நிலையில் கிடக்கும் வாறுகாலில் சாக்கடை தேங்கி கிடக்கிறது.

நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் பிரதான சாலையான எஸ்.என். ஹைரோட்டில் இருபுறமும் தூர்ந்துபோன வாறுகால்கள் புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

சாக்கடை கழிவுகள் தேக்கம்

இதனையொட்டி சில இடங்களில் சாக்கடை கழிவுகள் தேங்கி கிடக்கும் நிலை உருவாகி உள்ளது. அதில் குறிப்பாக டவுன் ஆர்ச் அருகே அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலகம் நுழைவு வாயில் முன்பு பாதி பணிகள் முடிவடைந்த நிலையில் கிடக்கும் வாறுகாலில் சாக்கடை தேங்கி கிடக்கிறது.

இதனால் அலுவலகத்திற்கு வருபவர்கள் முகம் சுளிக்கின்றனர். இதன் முலம் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் அதனை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அவரது உத்தரவின்பேரில் மாநகர நல அலுவலர் சரோஜா, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் உடனடியாக வாறுகால் தூர்வாறும் பணி நடைபெற்றது. தூய்மை பணியாளர்கள் தேங்கி கிடந்த சாக்கடை கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்தனர்.

Tags:    

Similar News