உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி காந்தி ரோட்டில் பெருக்கெடுத்து ஓடிய சாக்கடை நீரை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றிய போது எடுத்த படம்.

பண்ருட்டியில் சாலையில் ஓடிய சாக்கடை நீர்

Published On 2023-04-23 05:14 GMT   |   Update On 2023-04-23 05:14 GMT
  • சாலையில் கழிவு நீர் ஓடியதால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும்அபாயம் ஏற்பட்டது.
  • குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி காந்தி ரோட்டில் கழிவு நீர்வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் பெருக்கெடு த்து ஓடியது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும்அபாயம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி , துப்புரவு அலுவலர் முருகேசன், சுகாதாரஆய்வாளர்ஜெயச்சந்திரன், பாக்கியநாதன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராட்சச நீர்உறிஞ்சும் மோட்டார் வாகனத்தின் மூலம் சாக்கடை நீரை வெளியேற்றினர்.

திருமணமண்டபம்,வர்த்தகநிறுவனங் களில்சேரும் கழிவு நீர் மற்றும் குப்பைகளைதனியாக செப்டிக் டேங் அமைத்து வெளியேற்ற வேண்டும் என்றும் குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News