உள்ளூர் செய்திகள்

மக்கள் நீதிமன்றத்தில் 77 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2023-03-13 09:34 GMT   |   Update On 2023-03-13 09:34 GMT
  • தேசிய அளவில் அடிக்கடி லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மைய கட்டிடத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.

நாமக்கல்:

பல்வேறு கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு பெற்றுத்தரவும், தேசிய அளவில் அடிக்கடி லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மைய கட்டிடத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்கு ழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியு மான குணசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இதில் நீதிபதிகள் கிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி விஜய்கார்த்திக், வக்கீல் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருச்செங்கோடு கோர்ட்டில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற அமர்வில், நீதிபதிகள் சுரேஷ், சார்பு நீதிபதி தமிழரசி, ராசிபுரம் சார்பு நீதிபதி தீனதயாளன் உள்ளிட்ட நீதிபதிகளும், வக்கீல் முத்தீஸ்வரன் உள்ளிட்ட வக்கீல்களும் கலந்துகொண்டனர். இதில் குமாரபாளையம் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் உள்ள வழக்குகளும் விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

மக்கள் நீதிமன்றத்தில், சாலை விபத்துகள் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 98 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் 77 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் ரூ.3,67,34,074 மதிப்பீட்டில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News