உள்ளூர் செய்திகள்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பயனாளி ஒருவருக்கு தீர்வு காணப்பட்டது.

தேனியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2010 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2023-02-12 05:11 GMT   |   Update On 2023-02-12 05:11 GMT
  • தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
  • தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2010 வழக்குகளில் ரூ.4,14,05,240-க்கு தீர்வு காணப்பட்டது.

தேனி:

நாடு முழுவதும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற லோக்அதாலத் நடைபெற்றது. தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி திலகம் தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோபிநாதன், சார்பு நீதிபதி சுந்தரி, நீதித்துறை நடுவர் லலிதாராணி, கூடுதல் மகிளா நீதிபதி ரமேஷ், வக்கீல்கள் காண்டீபன், பாலாஜி, பிரபாகர், குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரியகுளத்தில் சார்பு நீதிபதி மாரியப்பன்,நீதித்துறை நடுவர் சர்மிளா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உத்தமபாளையத்தில் சார்பு நீதிபதி சுரேஷ்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி சரவண செந்தில்குமார், நீதித்துறை நடுவர்கள் ராமநாதன், ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஆண்டிபட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் பிச்சைராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

போடியில் நீதித்துறை நடுவர் வேலுமயில் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் நிலுவையில் இருந்த வழக்குகள் மற்றும் வங்கிகளின் வாரக்கடன்களுக்காக நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2010 வழக்குகளில் ரூ.4,14,05,240-க்கு தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News