உள்ளூர் செய்திகள்

மூத்தோர் தடகள போட்டி: ஓசூர் வீரர்கள் வென்றனர்

Published On 2023-02-27 15:19 IST   |   Update On 2023-02-27 15:19:00 IST
  • இந்திய அளவிலான மூத்தோர் தடகள போட்டி நடைபெற்றது.
  • ஓசூரை சேர்ந்த 20 தடகள வீரர்கள் பங்கு பெற்று 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் வென்றனர்.

ஓசூர்,

மூத்தோர் இந்திய தடகள சங்கம் சார்பில் கொல்கத்தாவில் உள்ள தேசிய விளயாட்டு அரங்கில் கடந்த 14-ம் தேதி முதல் 18-ந் தேதி வரை இந்திய அளவிலான மூத்தோர் தடகள போட்டி நடைபெற்றது.

ஒசூரில் கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டிகளில் வெற்றிபெற்ற 330 தடகள விளையாட்டு வீரர்கள், தமிழகம் சார்பில் இந்த மூத்தோர் தடகள போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த 20 தடகள வீரர்கள் பங்கு பெற்று 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் வென்றனர்.

தமிழக அணி மொத்தம் 70 தங்கம், 64 வெள்ளி மற்றும் 93 வெண்கலம் பதக்கங்கள் வென்று 622 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்து தேசிய அளவில் ஓட்டுமொந்த சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்றுள்ளது.

ஓசூரை சேர்ந்த சாதனை வீரர்கள் வருகிற செப்டம்பர் மாதம் பிலிப்பைன்சில் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணியை கிருஷ்ணகிரி மாவட்ட மூத்தோர் தடகள செயலாளர் செபாஸ்டியன் வழிநடத்தி ஒருகிணைத்தார்.

Tags:    

Similar News