உள்ளூர் செய்திகள்

நாட்டு வைத்தியம் குறித்த கருத்தரங்கம்

Published On 2023-03-09 09:35 GMT   |   Update On 2023-03-09 09:35 GMT
  • தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் நாட்டு வைத்தியம், பாரம்பரிய மருத்துவ பயிற்சி குறித்தான கருத்தரங்கம் நடைபெற்றது.
  • இதில் ஏற்காடு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வனத்துறை சார்பில், சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி முன்னிலையில் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் நாட்டு வைத்தியம், பாரம்பரிய மருத்துவ பயிற்சி குறித்தான கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் சேலம் மாவட்ட வன அலுவலர் ஷசாங் ரவி, உதவி வனபாதுகாவலர்கள் கண்ணன் மற்றும் சிவகுமார், இமாசல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மாவட்ட வனப்பாதுகாவலர் ரெஜினால்டு ராய்டன், ஏற்காடு உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் பாலமுருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

இதில் ஏற்காடு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் பேசிய சேலம் மாவட்ட வனப்பாதுகாவலர் பெரியசாமி, வனத்தையும், வனப்பகுதியில் உள்ள மூலிகை செடிகளையும் எவ்வாறு பாதுகாப்பது என்று பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.

பின்னர் பேசிய சித்த மருத்துவர் பாலமுருகன், நம் அதிகம் பயன்படுத்தும் நெல்லிக்காய், எலுமிச்சை, முருங்கை, முடக்கத்தான் கீரை, கீழாநெல்லி, சீத்தாப்பழம், கருவேப்பிலை, புதினா, வேம்பு போன்றவற்றின் பலன்களை விளக்கி கூறினார். முடிவில் ஏற்காடு வனச்சரக அலுவலர் பழனிவேல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News