ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் கருத்தரங்கு
- செயற்கை நுண்ணறிவு வழிகாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது.
- நூறு ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரு கணினி செய்கிறது.
ஓசூர்,
ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் தொழில் நுண்ணறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு வழிகாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு,
எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்களின் கண்டுபிடிப்பு பிறருக்கு உதவும் விதமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போது, நாம் அடையாளப் படுத்தப்படுவோம். தொழிலில் வெற்றிபெற நல்லகுடும்பம், நல்ல நண்பர்கள் உடன் இருக்கும்போது எளிதில் வெற்றிபெற முடியும்.
நாம் தொடங்கும் தொழிலில் அடித்தளம் மிகவும் வலிமையாக இருக்கவேண்டும் என்றார். மேலும், ஆசைப்படுங்கள், பேராசைப்படாமல் உழைத்து வாழ்வில் வெற்றிபெறவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் வணிகவியல் துறை பேராசிரியர் இளங்கோவன்; கலந்துகொண்டு பேசுகையில்,20 வருடங்களுக்கு முன்பு ஒரு ஊரில் ஒரு தொலைபேசிதான் இருக்கும். ஆனால் இன்று ஒவ்வொருவரின் கையிலும் செல்போன் இருக்கின்றது.
இதெல்லாம் நேனோ தொழில் நுட்பத்தின் வளர்ச்சி. அதுபோல இன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் நூறு ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரு கணினி செய்கிறது. அதற்கேற்ப மாணவர்கள் தயாராக வேண்டும் என ஊக்கப்படுத்தினார்.
பெங்களூரு, குளோபல் நிறுவன அதிகாரி மஞ்சுரெட்டி பேசியதாவது:-
தொழிற்சாலைகளில் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப மாணவர்கள் தயராக இருக்கவேண்டும் என்று கூறினார். இந்த கருத்தரங்கை வெங்கிடசாமி மற்றும் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர். இதில் பிற கல்லூரிகளில் இருந்தும் 500- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.முன்னதாக வணிகவியல் துறை தலைவர் மதிவாணன் வரவேற்றார்.
முடிவில், வணிக கணினி பயன்பாட்டுவியல் துறைத்தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.