உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

நத்தம் அருகே செல்வவிநாயகர் கோவில் திருவிழா

Published On 2023-06-01 05:19 GMT   |   Update On 2023-06-01 05:19 GMT
  • விழாவையொட்டி கடந்த மாதம் 26ந் தேதி கணபதி ஹோமம், கன்னிமார் தீர்த்தம் அழைத்து வந்து காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது.
  • அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம், இரவு சக்தி கரகம் அம்மன் குளம் கொண்டு செல்லுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்று அம்மன் சயனக் கோலத்தில் ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

நத்தம்:

நத்தம் கர்ணம் தெரு செல்வ விநா யகர், மதுர காளி யம்மன், பாலமுருகன் கோவில் திருவிழா வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கடந்த மாதம் 26ந் தேதி கணபதி ஹோமம், கன்னிமார் தீர்த்தம் அழைத்து வந்து காப்பு கட்டு தளுடன் திருவிழா தொடங்கியது.

தொ டர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. அதனையடுத்து கடந்த மாதம் 30ந் தேதி மாலை முனியாண்டி சாமிக்கு பழம் வைத்தல், இரவு அம்மன் குளத்திலிருந்து சக்தி கரகம் பாவித்து மேளதாளம் மற்றும் அதிர்வேட்டுகள் முழங்க கரகம் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மறுநாள் பால்குடம், அக்கினி சட்டி, அரண்மனை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம், இரவு சக்தி கரகம் அம்மன் குளம் கொண்டு செல்லுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் சயனக் கோலத்தில் ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News