உள்ளூர் செய்திகள்

ரூ.5 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

Published On 2023-03-25 15:24 IST   |   Update On 2023-03-25 15:24:00 IST
  • நடந்த சந்தையில் 430-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர்.
  • ஒரு ஆடு விலை ரூ. 5,500 முதல் ரூ.14,000 வரையும் விற்பனையானது,

தருமபுரி,  

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது.

சந்தையில் ஆடு, கோழி உள்ளிட்ட வாங்க விவசாயிகளும், ஆடு வளர்ப்பவளும், விற்பனைக்கு கொண்டு வந்தனர் ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

நடந்த சந்தையில் 430-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர். ஒரு ஆடு விலை ரூ. 5,500 முதல் ரூ.14,000 வரையும் விற்பனையானது, தொத்தம் ரூ. 5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News