உள்ளூர் செய்திகள்

சாலை அமைக்கும் பணிக்கான இடத்தை கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்ட காட்சி.

இடையஞ்சாவடி ஊராட்சியில் புதிய சாலை அமைக்க இடம் தேர்வு:கலெக்டர் பழனி நேரில் ஆய்வு

Published On 2023-11-04 07:26 GMT   |   Update On 2023-11-04 07:26 GMT
  • சாலை அமைப்பது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது என்றார்.
  • மணிவாசகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம், இடையஞ்சாவடி ஊராட்சியில், புதிய சாலை அமைக்கும் பணிக்கான இடத்தினை மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடையஞ்சாவடி ஊராட்சி, வி.ஐ.பி நகரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ், ரூ.21.30 லட்சம் மதிப்பீட்டில் 850 மீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கும் பணிக்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன் சாலை அமைப்பது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது என்றார். ஆய்வின்போது, வானூர் வருவாய் தாசில்தார் நாராயணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News