உள்ளூர் செய்திகள்

அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள்.

குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய தரமற்ற பொருட்கள் பறிமுதல்-உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2023-08-22 08:11 GMT   |   Update On 2023-08-22 08:11 GMT
  • சபரிமலைக்கு மாலை அணிவிந்த பக்தர்களும் அருவிகளில் குளித்து விட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு செல்வார்கள்.
  • சுமார் 850 கிலோ பச்சரிசி பலமுறை பயன்படுத்தப்பட்டு கெட்டுப்போன நிலையில் இருந்தது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பழமை வாய்ந்த குற்றாலநாதர் கோவில் அமைந்துள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் மட்டுமின்றி குற்றால சீசன் காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.

தரமற்ற பொருட்கள்

இதேபோன்று சபரி மலைக்கு மாலை அணிவிந்த அய்யப்ப பக்தர்களும் குற்றாலம் அருவிகளில் குளித்து விட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு செல்வார்கள். குற்றாலநாதர் கோவிலில் சுவாமிக்கு படைக்கப்படும் உணவும், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமும் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில் தென்காசி வட்டார உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நாக சுப்பிர மணியன் மற்றும் அதிகாரிகள் குற்றாலநாதர் கோவிலில் உணவு மற்றும் பிரசாதம் தயாரிக்கும் அறையில் திடீர் ஆய்வை செய்தனர். அப்போது அங்கு சுமார் 850 கிலோ பச்சரிசி பலமுறை பயன்படுத்தப்பட்டு கெட்டுப்போன நிலையில் இருந்தது. மேலும் 48 லிட்டர் எண்ணெய் மற்றும் 15 கிலோ பச்சரிசி மாவு, 21/2 கிலோ வெல்லம் உள்ள உள்ளிட்ட தரமற்ற பல்வேறு பிரசாதம் தயாரிக்கும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அவர்கள் தகவல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர் .

ஏற்கனவே குற்றாலத்தில் பல ஓட்டல்களில் உணவுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தரம் இல்லாத உணவுகளை அழித்த நிலையில் தற்போது குற்றாலநாதர் கோவிலில் தரமற்ற உணவுப் பொருட்களை உணவுத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளளர்.

Tags:    

Similar News