உள்ளூர் செய்திகள்

ஓசூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் : துண்டு, துண்டுகளாக்கி சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

Published On 2022-10-19 09:20 GMT   |   Update On 2022-10-19 09:20 GMT
  • பிளாஸ்டிக் பைகள், கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • மாநகராட்சி குடோனுக்கு கொண்டு வரப்பட்டு சிறு, சிறு துண்டுகளாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஓசூர்,

ஓசூரில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை, அதிகளவில் உற்பத்தி செய்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் உள்ள 2 தனியார் தொழிற்சாலைகள் மற்றும் அனுமே பள்ளியில் உள்ள ஒரு தொழிற்சாலையில், ஓசூர் சுற்றுச்சூழல் துறை மாவட்ட பொறியாளர் வெங்கடேசன், மற்றும் மாநகராட்சி நகர் நல அலுவலர் அஜிதா ஆகியோர் தலைமையில் உதவி சுற்றுச்சூழல் துறை பொறியாளர் சுமித்ராபாய், உதவி பொறியாளர்கள் ரங்கசாமி, தீதையாளன் மற்றும் சுகாதார ஆய்வாளர் மணி மேற்பார்வையாளர்கள் சீனிவாசன், கவுரிசங்கர் ஆகியோர் அடங்கிய அதிரடி ரெய்டு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு மற்றும் ரெய்டின் போது, சுமார் 15 டன் அளவிலான பிளாஸ்டிக் பைகள், கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளின் மின்இணைப்பை துண்டிக்கவும் , மேல் நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் லாரிகள் மூலம், ஓசூர் ஆனந்த நகரில் உள்ள மாநகராட்சி குடோனுக்கு கொண்டு வரப்பட்டு சிறு, சிறு துண்டுகளாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் இவை அரிய லூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News