உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

சென்னை விமான நிலையத்தில் தங்கம், மின்னணு சாதனங்கள் பறிமுதல்- இரண்டு பேர் கைது

Update: 2022-07-01 16:45 GMT
  • இரண்டு பயணிகளிடம் சுங்கத்துறையினர் தீவிர சோதனை.
  • உடல் மற்றும் உடைமைகளில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்

சார்ஜாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த, யூசுப் அலி சையது மற்றும் திருச்சியைச் சேர்ந்த சதாம் உசேன் ஆகியோர், கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, இரண்டு பயணிகளையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் போது அவர்களது உடல் மற்றும் உடைமைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.1.43 கோடி மதிப்புள்ள தங்கம், மின்னணு சாதனங்கள் மற்றும் குங்குமப்பூ பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இந்த பயணிகள் இருவரும் கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் வி. பழனியாண்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News