மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்ற காட்சி.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு
- அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
- மாநில சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காட்டப்பட்டு விரும்பும் இடங்கள் வழங்கப்படும்.
நெல்லை:
தொடக்க கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், இடமாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்கியது.
முதல் நாளான இன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது. முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி, நேர்முக உதவி–யாளர்கள் டைடஸ், அமலா ஆகியோர் முன்னிலையில் நடந்த கலந்தாய்வில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாநில சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காட்டப்பட்டு விரும்பும் இடங்கள் வழங்கப்படும்.
நெல்லை மாவட்டத்தில் 31 இைடநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால் வெளி மாவட்டத்தில் பணியாற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் இந்த இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வருவதற்கு ஆர்வத்துடன் உள்ளனர்.
நாங்குநேரி மறுகால்தலை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை சேர்ந்த ஆசிரியர் பாபு என்பவர் திடீரென கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறும்போது, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலந்தாய்வின் போது மானூர் யூனியன் மேலப்பிள்ளையார் குளம் பள்ளியில் பணியாற்றிய நான் பாளை வட்டாரத்தில் உள்ள பள்ளியில் பணியிட மாறுதல் கேட்டேன். ஆனால் எனக்கு நாங்குநேரி வட்டாரத்தில் பணி வழங்கினார்.
எனவே எனக்கு மீண்டும் பணியிடம் மாற்றம் வேண்டும் என கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கலந்தாய்வு நிறைவு பெற்றதும் பட்டதாரி ஆசிரியர்க–ளுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும்.